Saturday, October 27, 2018

சிதம்பரம் - கிழக்கு கோபுர வாயில்:

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)

திருப்புகழ் குறிப்புகள்

வாதவூர் அடிகளான நம் மணிவாசகப் பெருமான் தில்லைப் பரம்பொருளை வழிபடச் சென்ற சிறப்புப் பொருந்தியது இக்கீழ வாயில். இதனைக் குறிக்கும் சுதைச் சிற்பத்தினை இத்திருவாயில் சுவற்றில் தரிசித்து மகிழலாம்.

மற்ற மூன்று கோபுர வாயில்களிலும், வேலவனின் திருச்சன்னிதி உட்புறத்தில் அமைந்திருக்க, கிழக்கு வாயிலிலோ வெளிப்புறத்தில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இரு தேவியரோடு சிறிய திருமேனியனாய் கந்தப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றான். 

மேலும் இக்கீழ கோபுரத்தின் உட்புறத்தில், இடது பக்கத்தில், கோபுரத்தின் மீதிலேயே எண்ணிறந்த தெய்வ மூர்த்தங்கள் அமைந்திருக்க, அவைகளுக்கு நடுவினில், யானை மீதமர்ந்த திருக்கோலத்தில் வெற்றி வேலாயுதக் கடவுள் எழுந்தருளி இருக்கின்றான். அவசியம் தரிசித்து இன்புற வேண்டிய திருக்காட்சி.

மற்ற 3 வாயில்களுக்கு உள்ளது போல் 'கிழக்கு கோபுர வாசலில் மேவிய பெருமாளே' என்று நேரடிக் குறியீடோடு கூடிய திருப்புகழ் இக்கீழ வாயிலுக்கு இல்லை. எனினும் 'வந்து வந்துவித்தூறி' என்று துவங்கும் தில்லைத் திருப்புகழின் 6ஆவது வரியில், 'சிந்துரத்தேறி அண்டரொடு தொண்டர்சூழ' என்று யானைமீது முருகப் பெருமான் எழுந்தருளி வரும் திருக்கோலத்தினை நம் அருணகிரியார் போற்றியிருப்பதால், இத்திருப்பாடலையே கிழக்கு வாயிலுக்கான பாடலெனக் கொண்டு, இங்குள்ள வேலவனின் திருமுன்பு பாராயணம் புரிந்து வணங்குதல் சிறப்பு,

கிழக்கு வாயில் திருப்புகழ்:

தந்த தந்தனத் தான தந்ததன
     தந்த தந்தனத் தான தந்ததன
          தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான
-
வந்து வந்துவித்தூறி எந்தனுடல்
     வெந்து வெந்து விட்டோட நொந்துயிரும்
          வஞ்சினங்களில் காடு கொண்ட வடிவங்களாலே
-
மங்கி மங்கி விட்டேனை உந்தனது 
     சிந்தை சந்தொஷித்தாளு கொண்டருள
          வந்து சிந்துரத்தேறி அண்டரொடு ...... தொண்டர்சூழ
-
எந்தன் வஞ்சனைக்காடு சிந்திவிழ
     சந்தர் அண்டிசைத் தேவ ரம்பையர்!க
          னிந்து பந்தடித்தாடல் கொண்டுவர ...... மந்திமேவும்
-
எண் கடம்பணித் தோளும் அம்பொன்முடி
     சுந்தரத் திருப்பாத பங்கயமும்
          எந்தன் முந்துறத் தோணிஉந்தனது ...... சிந்தை தாராய்
-
அந்தரம் திகைத்தோட விஞ்சையர்கள்
     சிந்தை மந்திரத்தோட கெந்தருவர் 
          அம்புயன் சலித்தோட எண்திசையை ...... உண்ட மாயோன்
-
அஞ்சி உன்பதச் சேவை தந்திடென
     வந்த வெஞ்சினர்க் காடெரிந்து விழ
          அங்கியின் குணக்கோலை உந்திவிடு ...... செங்கை வேலா
-
சிந்துரம் பணைக்கோடு கொங்கைகுற
     மங்கையின் புறத் தோள் அணைந்துருக
          சிந்துரம்தனைச் சீர்மணம் புணர்நல் ...... கந்தவேளே
-
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
     கொண்ட செந்தழற் கோலர் அண்டர்புகழ்
          செம்பொன் அம்பலத்தாடும் அம்பலவர் ...... தம்பிரானே.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


(திருப்பாடல் 1)

கிழக்கு கோபுர வாயில் காட்சிகள்


















No comments:

Post a Comment