Wednesday, November 28, 2018

த்ரயம்பகபுரம்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவாரூர் 

திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீதிரியம்பகேஸ்வரர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும், சேங்காலிபுரத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம். திரு. வளையப்பட்டி கிருஷ்ணன் அவர்களின் சீரிய முயற்சியால், காலச் சுழற்சியில் முற்றிலும் ஷீணமடைந்திருந்த இத்தலத்தில், திறந்த வெளியில் எழுந்தருளியிருந்த ஸ்ரீதிரயம்பகேஸ்வர சிவலிங்க மூர்த்திக்கு ஆலயம் ஒன்றினை எழுப்பியுள்ளனர்.

(Google Maps: Sengalipuram, Tamil Nadu, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன
          தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான

உரையொழிந்து நின்றவர்பொருள் எளிதென
     உணர்வு கண்டுபின் திரவிய இகலருள் 
          ஒருவர் நண்படைந்துள திரள் கவர்கொடு ...... பொருள்தேடி

உளமகிழ்ந்து வந்துரிமையில் நினைவுறு
     சகல இந்த்ர தந்த்ரமும் வல விலைமகள் 
         உபய கொங்கையும் புளகிதம் எழமிக ...... உறவாயே

விரக அன்புடன் பரிமள மிகவுள
     முழுகி நன்றிஒன்றிடமலர் அமளியில்
          வெகுவிதம் புரிந்தமர்பொரு சமயமதுறு நாளே

விளைதனம் கவர்ந்திடு பல மனதியர் 
     அயல் தனங்களும் தனதென நினைபவர்
          வெகுளியின் கணின்றிழி தொழிலதுவற ...... அருள்வாயே

செரு நினைந்திடும் சினவலி அசுரர்கள் 
     உகமுடிந்திடும் படியெழு பொழுதிடை
          செகமடங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித்

திகுதிகுந்திகும் திகுதிகு திகுதிகு
     தெனதெனம் தெனம் தெனதென தெனதென
          திமிதிமிம் திமிம் திமிதிமி திமியென ...... வருபூதம் 

கரைஇறந்திடும் கடலென மருவிய
     உதிர மொண்டும் உண்டிடஅமர் புரிபவ
          கலவி அன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே

கனமுறும் த்ரியம்பகபுரம் மருவிய
     கவுரி தந்த கந்தறுமுக எனஇரு
          கழல்பணிந்து நின்றமரர்கள் தொழவல ...... பெருமாளே.

No comments:

Post a Comment