Sunday, November 25, 2018

சிவபுரம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர்

திருக்கோயில்: அருள்மிகு சிவபுரநாதர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திலிருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Sri Sivapuranathar Temple, Sivapuram, Kumbakonam, Tamil Nadu 612401, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான

மனமெனும் பொருள் வானறை கால்கனல்
     புனலுடன்புவி கூடியதோர்உடல்
          வடிவு கொண்டதிலே பதிமூணெழு ...... வகையாலே

வரு சுகம்துயர் ஆசையிலேஉழல்
     மதியை வென்று பராபர ஞானநல்
          வழிபெறும்படி நாயடியேனை நின் அருள்சேராய்

செனனி சங்கரி ஆரணி நாரணி
     விமலி எண்குண பூரணி காரணி
          சிவை பரம்பரையாகிய பார்வதி ...... அருள்பாலா

சிறை புகும்சுரர் மாதவர் மேல்பெற
     அசுரர் தம்கிளையானது வேரற
          சிவன்உகந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே

கனகன் அங்கையினால் அறை தூணிடை
     மனித சிங்கமதாய் வரை பார்திசை
          கடல் கலங்கிடவே பொருதேஉகிர் ...... முனையாலே

கதறவென்றுடல் கீணவன் ஆருயிர் 
     உதிரமும் சிதறாதமுதாய்உணும் 
          கமல உந்தியனாகிய மால்திரு ...... மருகோனே

தினகரன் சிலை வேள்அருள் மாதவர்
     சுரர்கள் இந்திரனார் உரகாதிபர்
          திசைமுகன்செழு மாமறையோர்புகழ் அழகோனே

திருமடந்தையர் நாலிருவோர் நிறை
     அகமொடம்பொனின் ஆலய நீடிய
          சிவபுரம்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே.

No comments:

Post a Comment