Sunday, November 25, 2018

திரிபுவனம்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அருள்மிகு அன்னை தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகம்பகரேசுவரர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Sri Kampahareswar Temple, No. 55, State Highway 64, Tirubuvanam, Tamil Nadu 612103, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
     சத்திக்கச் சில தித்திக்கப்படும் ...... அன்புபேசித்

தழுவிய மகளிர் தமுகிழ்முலை உரமிசை
     தைக்கச் சர்க்கரை கைக்கப்பட்டன ...... தொண்டை ஊறல்

கனவிலும் நுகர்தரு கலவியின் வலையிடை
     கட்டுப்பட்டுயிர் தட்டுப் பட்டழிகின்றதோ தான்

கதிபெற விதியிலி மதியிலி உனதிரு
     கச்சுற்றச்சிறு செச்சைப் பத்மபதம் பெறேனோ

முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
     முத்தச் சித்ர தனத்துக்கிச்சித ...... அம்புராசி

முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட
     முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும் ...... அடங்கல்வீரா

அனுபவம் அளிதரு நிகழ்தரும் ஒருபொருள்
     அப்பர்க்கப்படி ஒப்பித்தர்ச்சனை ...... கொண்டநாதா

அகிலமும் அழியினும் நிலைபெறு !திரிபுவ
     னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே

No comments:

Post a Comment