(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (தென்கரை)
மாவட்டம்: கரூர்
திருக்கோயில்: அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
குளித்தலை - மணப்பாறை மார்க்கத்தில், குளித்தலையிலிருந்து 10 கி.மீ தூரத்திலிருந்தும் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
(Google Maps: Arulmigu Rathnagireeswarar Temple, Ayyarmalai, Sivayam, Kulithalai, Tamil Nadu 639120, India)
(Google Maps: Arulmigu Rathnagireeswarar Temple, Ayyarmalai, Sivayam, Kulithalai, Tamil Nadu 639120, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
கயலைச் சருவிப் பிணையொத்தலர்பொற்
கமலத்தியல் மைக் ...... கணினாலே
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட்டெழு மைக் ...... குழலாலே
நயபொற் கலசத்தினை வெற்பினை!மிக்
குளநற் பெரு செப்பிணையாலே
நலமற்றறிவற்றுணர்வற்றனன் நல்
கதியெப்படி பெற்றிடுவேனோ
புயலுற்றியல் மைக் கடலிற் புகு!கொக்
கறமுற் சரம் உய்த்தமிழ்வோடும்
பொருதிட்டமரர்க்குறு துக்கமும்!விட்
டொழியப் புகழ் பெற்றிடுவோனே
செயசித்திர முத்தமிழ் உற்பவநற்
செபமுற் பொருளுற்றருள் வாழ்வே
சிவதைப் பதிரத்தின வெற்பதனில்
திகழ் மெய்க் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
சுற்ற கபடோடுபல சூதுவினையானபல
கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர்!சலி
சுற்றவிழலான பவிஷோடு கடல் மூழ்கிவரு ...... துயர்மேவித்
துக்க சமுசாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில் மெழுகானவுடல்
சுத்தமறியாத பறிகாயமதில் மேவிவரு ...... பொறியாலே
சற்றுமதியாத கலிகாலன்வரு நேரமதில்
தத்துஅறியாமலொடி ஆடிவரு சூதரைவர்
சத்த பரிசான மண ரூபரசமான பொய்மை ...... விளையாடித்
தக்க மடவார் மனையை நாடியவரோடு பல
சித்து விளையாடுவினை சீசியிது நாறவுடல்
தத்தி முடிவாகி விடுவேனொ முடியாதபதம் அருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம்
திக்குமுகிலாட அரியாட அயனாடசிவன்
ஒத்து விளையாட பரையாட வரராட பல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே
எத்திசையும் நாடி யமனார் நிணமொடாட பெல
மிக்கநரியாட கழுதாட கொடியாடசமர்
எற்றிவரு பூதகணமாட ஒளியாடவிடு ...... வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தம்அலை காமுக குகா நமசிவாயனொடு
ரத்நகிரி வாழ்முருகனே இளையவா அமரர் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ்பாடி
முத்தனாம் ஆறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே
உத்தமாதான சற்குணர்நேயா
ஒப்பிலா மாமணிக்கிரி வாசா
வித்தகா ஞான சத்திநிபாதா
வெற்றிவேலாயுதப் ...... பெருமாளே.
No comments:
Post a Comment