Saturday, November 24, 2018

நெடுங்களம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி தென்கரை)

மாவட்டம்: திருச்சி 

திருக்கோயில்: அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருச்சியிலிருந்து 21 கி.மீ தூரத்தில், சோழகம்பட்டி எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Sri Thirunedungulanathar Swamy Temple,Padal Petra Temple, Thirunedungalam, Thuvakudi, Tiruchirappalli, Tamil Nadu 620015, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
     தந்ததன தந்ததன ...... தந்ததான

பஞ்சபுலனும் பழைய ரண்டுவினையும் பிணிகள்
     பஞ்சென எரிந்துபொடி ...... அங்கமாகிப்

பண்டறவுடன் பழைய தொண்டர்களுடன் பழகி
     பஞ்சவர் வியன் பதியுடன் குலாவக்

குஞ்சரமுகன் குணமொடந்த வனம் வந்துலவ
     கொஞ்சிய சிலம்புகழல் ...... விந்துநாதம் 

கொஞ்சமயில் இன்புறமெல் வந்தருளி என்கவலை
     கொன்றருள் நிறைந்தகழல் இன்றுதாராய்

எஞ்சியிடையும்சுழல அம்புவிழியும்சுழல
     இன்பரச கொங்கை கரமும் கொளாமல்

எந்தவுடை சிந்தபெல மிஞ்சிஅமுதம் புரள
     இந்து நுதலும் புரள ...... கங்குல் மேகம்

அஞ்சும்அளகம் புரள மென்குழைகளும் புரள
     அம்பொனுரு மங்கை மணம் உண்டபாலா

அன்பர் குலவும்திரு நெடுங்கள வளம்பதியில்
     அண்டர்அயனும் பரவு ...... தம்பிரானே

No comments:

Post a Comment