Wednesday, November 28, 2018

திருவிற்குடி

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூர் - மயிலாடுதுறை பயண மார்கத்தில், திருவாரூரிலிருந்து 11 கி.மீ தூரத்திலும், கங்களாஞ்சேரி எனும் சிற்றூரிலிருந்து 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Veetattaneswarar Temple-Ishtadevata Temple Service, Thirvirkudi, Thiruvirkudi, Tamil Nadu 610101, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தத்த தத்ததன தத்த தத்ததன
     தத்த தத்ததன தத்த தத்ததன
          தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான

சித்திரத்திலும் மிகுத்த பொற்பவளம் 
     மொத்த மெத்த அழகுற்ற குத்துமுலை
          சிற்ப சிற்ப மயிரொத்த சிற்றிடைய ...... வஞ்சிமாதர்

சித்தமத்தனையும் உற்றளப்ப கடல்
     மொய்த்த சிற்றுமணலுக்கும் எட்டியது
          சிக்கு மைக்குழல்கள் கஸ்துரிப் பரிமளங்கள் வீசப்

பத்திரத்திலும் மிகுத்த கட்கயல்கள்
     வித்துருத் தநு வளைத்த நெற்றிவனை
          பற்களைப் பளிரெனச் சிரித்துமயல் ...... விஞ்சைபேசிப்

பச்சை ரத்நமயிலைப் பொலத்தெருவில் 
     அத்தியொத்த மதம் ஒத்து நிற்பர்வலை
          பட்டுழைத்து குழியுற்ற அத்தியென ...... மங்குவேனோ

தத்தனத்தன தனத்தனத்தனன
     தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
          தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ...... சங்குபேரி

சத்தமுற்று கடல் திக்குலக் கிரிகள்
     நெக்கு விட்டு முகிலுக்கு சர்ப்பமுடி
          சக்கு முக்கிவிட கட்க துட்டசுரர் அங்கமாள

வெற்றியுற்ற கதிர் பத்திரத்தையருள் 
     இச்சுரர்க்கதிபதிப் பதத்தை!உறு
          வித்தளித்த மதி பெற்ற தத்தைமணம் உண்டவேலா

வெட்கிடப் பிரமனைப் பிடித்து!முடி
     யைக் குலைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
          விற்குடிப் பதியில் இச்சை உற்றுமகிழ் ...... தம்பிரானே.

No comments:

Post a Comment