Monday, November 26, 2018

திருச்செங்காட்டங்குடி

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

நன்னிலம் வட்டத்தில், நன்னிலத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருப்புகலூரிலிருந்து 4 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: SCN079 Sri Uthirapasupatheeshwarar Swamy Temple, Thiruchengattangudi, Thevaram padal pettra sthalam)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்தான தானதன தானதன தானதன
     தந்தான தானதன தானதன தானதன
          தந்தான தானதன தானதன தானதன ...... தனதான

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
     கொந்தார மாலைகுழல் ஆரமொடு தோள்புரள
          வண்காதில் ஓலைகதிர் போலஒளி வீசஇதழ் ...... மலர்போல

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
     கொஞ்சார மோககிளி ஆகநகை பேசியுற
          வந்தாரை வாருமிரு நீர்உறவெனாசை மயலிடுமாதர்

சங்காளர் சூதுகொலைகாரர் குடிகேடர் சுழல்
     சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
          சண்டாளர் சீசிஅவர் மாயவலையோடடியென் உழலாமல் 

சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
     வெந்தோட மூலஅழல் வீச உபதேசமது
          தண்காதிலோதிஇரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே

சிங்கார ரூபமயில் வாகன நமோநமென
     கந்தா குமாரசிவ தேசிக நமோநமென
          சிந்தூர பார்வதி சுதாகர நமோநமென ...... விருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவ நமோநமென
     கங்காள வேணிகுருவானவ நமோநமென
          திண்சூரர்ஆழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே

இங்கீத வேதபிரமாவைவிழ மோதியொரு
     பெண்காதலோடு வனமேவி வளி நாயகியை
          இன்பான தேனிரச மார்முலை விடாதகர ...... மணிமார்பா

எண்தோளர் காதல்கொடு காதல்கறியே பருகு
     செங்காடு மேவி பிரகாசமயில் !மேலழகொ
          டென்காதல் மாலைமுடி ஆறுமுகவா அமரர் ...... பெருமாளே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)






















No comments:

Post a Comment