Monday, November 26, 2018

தான் தோன்றி (ஆக்கூர்)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு தான்தோன்றி ஈஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

மயிலாடுதுறை - பொறையாறு மார்க்கத்தில், மயிலாடுதுறையிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Shri Thanthondri Easwarar Shiva Temple, Mayiladuthurai - Akkur Rd, Akkur, Tamil Nadu 609301, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
     தாந்தாந்த தத்ததன ...... தனதான

சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்றும் அப்பில்வளர்
     தூண்போன்ற இக்குடிலும் உலகூடே

சோர்ந்தூய்ந்தும் அக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
     தோம்பாங்கை உட்பெரிதும் உணராமே

வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
     வேண்டீங்கை இட்டுவர ...... குழுவார்போல்

வேம்பாங்கு மற்றுவினையாம் பாங்குமற்றுவிளை
     வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய்

வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
     வான்தோன்று மற்றவரும் அடிபேண

மான்போன்ற பொன்தொடிகள் தாம்தோய்ந்த நற்புயமும்
     வான்தீண்ட உற்றமயில் ...... மிசையேறித்

தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
     சாய்ந்தேங்க உற்றமர்செய் ...... வடிவேலா

தான்தோன்றி அப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
     தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.

No comments:

Post a Comment