Monday, November 26, 2018

திருவிடைக்கழி

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில் 

தல வகை: முருகன் திருக்கோயில் (சிவத்தலம் எனினும் முருகன் திருகோயிலெனவே பிரசித்தமாக அறியப் பட்டு வருகின்றது)

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சேந்தனார் (திருவிசைப்பா)


தலக் குறிப்புகள்

திருக்கடையூரிலிருந்து 7 கி.மீ தூரத்திலும், தில்லையாடி எனும் ஊரிலிருந்து 4 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Shri Murugan Temple, Thiruvidakazhi, Tamil Nadu 609310, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 8.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

அனலப்பரிபுக்க குணத்ரயம்!வைத்
     தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா

அவலக் கவலைச் சவலைக் !கலைகற்
     றதனில் பொருள் சற்றறியாதே

குனகித் தனகிக் கனலொத்துருகிக்
     குலவிக் கலவிக் ...... கொடியார் தம் 

கொடுமைக் கடுமைக் குவளைக் கடையில்
     குலைபட்டலையக் ...... கடவேனோ

தினை வித்தினநற் புனமுற்ற குறத்
     திருவைப் புணர்பொற் ...... புயவீரா

தெளியத் தெளியப் பவளச் சடிலச்
     சிவனுக்கொரு சொல் ...... பகர்வோனே

கனகச் சிகரக் குலவெற்புருவக்
     கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா

கழியைக் கிழியக் கயல்தத்தும்!இடைக்
     கழியில் குமரப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
     தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான

இரக்கும்அவர்க்கிரக்க மிகுத்தளிப்பன சொப்பனத்திலு!மற்
     றெனக்கியலுக்கிசைக்கெதிரெப் ...... புலவோர்!என்

றெடுத்துமுடித் தடக்கை முடித்திரட்டை உடுத்திலச்சினை!இட்
     டடைப்பையிடப் ப்ரபுத்துவம் உற்றியல் மாதர்

குரக்குமுகத்தினைக் குழலைப் பனிப்பிறை ஒப்பெனப்!புயலொப்
     பெனக்குறுகிக் கலைக்குள் மறைத்திடு மானின்

குளப்படியில் சளப்படும்இப் பவக்கடலைக் கடக்கஇனிக்
     குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே

அரக்கரடல் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்
     கலக்கணறக் குலக்கிரி பொட்டெழ வாரி

அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக்கமலத்
     தனைச்சிறையிட்டிடைக்கழியில் ...... பயில்வோனே

கரக்கரடக் களிற்று மருப்புலக்கையினில் கொழித்த மணிக்
     கழைத் தரளத்தினைத் தினையில் ...... குறுவாளைக்

கணிக்குறவக் குறிச்சியினில் சிலைக்குறவர்க்கிலச்சை வரக்
     கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...... தனதான

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனும் எப்படிப் ...... பலவாழ்வும்

பழைய முத்தியில் பதமும் நட்புறப்
     பரவு கற்பகத் ...... தருவாழ்வும்

புகரில் புத்தியுற்றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்

புலன்அகற்றிடப் பலவிதத்தினைப்
     புகழ் பலத்தினைத் ...... தரவேணும்

தகரில்அற்றகைத் தலம் விடப்பிணைச்
     சரவணத்தினில் ...... பயில்வோனே

தனிவனத்தினில் புன மறத்தியைத்
     தழுவு பொற்புயத் ...... திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
     திறலயில் சுடர்க் ...... குமரேசா

செழுமலர்ப் பொழில் குரவமுற்றபொற்
     திருவிடைக்கழிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனனதன தத்தனத் தனனதன தத்தனத்
     தனனதன தத்தனத் ...... தனதான

படிபுனல் நெருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
     பவமுறை அவத்தைமுக் ...... குணநீடு

பயில்பிணிகள் மச்சை சுக்கிலம் உதிர மத்திமெய்ப்
     பசிபடு நிணச்சடக் ...... குடில்பேணும்

உடலது பொறுத்தறக் கடைபெறு !பிறப்பினுக்
     குணர்வுடைய சித்தமற்றடி நாயேன்

உழலுமது கற்பலக் கழலிணை !எனக்களித்
     துனது தமர் ஒக்க வைத்தருள்வாயே

கொடியவொரு குக்குடக் கொடிய வடிவிற்புனக்
     கொடிபடர் புயக்கிரிக் ...... கதிர்வேலா

குமர சமரச்சினக்கும் அரவணி அத்தன்மெய்க்
     குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே

தடவிகட மத்தகத் தடவரையர் அத்தர்!அத்
     தடல்அனுச வித்தகத் ...... துறையோனே

தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
     தரு திருவிடைக்கழிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனதனனத் தனதான தனதனனத் தனதான
     தனதனனத் தனதான ...... தனதான

பழியுறு சட்டகமான குடிலை எடுத்திழிவான
     பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப்

படுகுழி புக்கினிதேறும் வழிதடவித் தெரியாது
     பழமை பிதற்றிடுலொக ...... முழுமூடர்

உழலும் விருப்புடனோது பலசவலைக் கலைதேடி
     ஒருபயனைத் தெளியாது ...... விளியாமுன்

உனகமலப் பதநாடி உருகிஉளத்தமுதூற
     உனது திருப்புகழோத ...... அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
     திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத்

திமிதிமெனப் பொருசூரன் நெறுநெறெனப் பலதேவர்
     ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே

அழகு தரித்திடுநீப சரவண உற்பவவேல
     அடல்தரு கெற்சிதநீல ...... மயில்வீரா

அருணை திருத்தணிநாக மலைபழநிப் பதிகோடை
     அதிப இடைக்கழி மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
          தனத்த தானன தனதன தனதன ...... தனதான

பெருக்கமாகிய நிதியினர் வரின்மிக
     நகைத்து வாமென அமளி அருகுவிரல்
          பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... உறவாடிப்

பிதற்றியே அளவிடு பணமது!தம
     திடத்திலே வருமளவு நலுரை கொடு
          பிலுக்கியே வெகு சரசமொடணைகுவர் ...... கனமாலாய்

முருக்கி நேரிதழ் அமுது பருகுமென
     உரைத்து லீலைகள் அதிவிதமொடு மலை
          முலைக்குளே துயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின்

முறுக்கியேஉதை கொடுவசை உரைதரு
     மனத்து ரோகிகள் இடுதொழில் வினையற
          முடுக்கியேயுஉனதிருகழல் மலர்தொழ ...... அருள்தாராய்

நெருக்கியே வரும் அவுணர்கள் குலமற
     உறுக்கியேமயில் முதுகினில் விசைகொடு
          நிலத்திலே சமர் பொருதவர் உயிர்பலி ...... கொளும்வேலா

நெகத்திலேஅயன் முடிபறி இறைதிரி
     புரத்திலேநகை புரிபரன்அடியவர்
          நினைப்பிலேஅருள் தருசிவன்உதவிய ...... புதல்வோனே

செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
     மருக்குலாவிய மலரணை மிசைபுணர்
          திருக்கைவேல் வடிவழகிய குருபர ...... முருகோனே

சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
     இருக்கு வேதனும் இமையவர் பரவிய
          திருக்குராஅடி நிழல்தனில் உலவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனத்த தானன தனதன ...... தனதான

மருக்குலாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்குலாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை இனிவர ...... விடவேணும்
தருக்குலாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்தனே மணி மரகத ...... மயில்வீரா
திருக்குராவடி நிழல்தனில் உறைவோனே
திருக்கை வேல் வடிவழகிய ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தனன தத்தன தனதன தனன தத்தன தனதன
     தனன தத்தன தனதன ...... தனதான

முலைகுலுக்கிகள் கபடிகள் வடிபுழுக்கைகள் அசடிகள்
     முறைமசக்கிகள் திருடிகள் ...... மதவேணூல்

மொழி பசப்பிகள் விகடிகள் அழுமனத்திகள் தகுநகை
     முகமினுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ்

கலைநெகிழ்த்திகள் இளைஞர்கள் பொருள் பறித்தமளியின்மிசை
     கனியிதழ்ச்சுருள் பிளவிலை ...... ஒருபாதி

கலவியில்தரும் வசவிகள் விழிமயக்கினில் வசமழி
     கவலையற்றிட நினதருள் ...... புரிவாயே

அலைநெருப்பெழ வடவரை பொடிபடச் சமணர்கள்குலம்
     அணிகழுப்பெற நடவிய ...... மயில்வீரா

அரனரிப் பிரமர்கள்முதல் வழிபடப் பிரியமும்வர
     அவரவர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே

சிலைமொளுக்கென முறிபட மிதிலையில் சநகமனருள்
     திருவினைப் புணரரி திரு ...... மருகோனே

திரள்வருக்கைகள் கமுகுகள் சொரிமதுக் கதலிகள்வளர்
     திருவிடைக்கழி மருவிய ...... பெருமாளே.

No comments:

Post a Comment