Sunday, November 25, 2018

காவளூர்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அருள்மிகு கந்தன் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருக்கருகாவூரிலிருந்து 9 கி.மீ தூரத்திலும், சுவாமி மலையிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், திட்டையிலிருந்து 12 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Kavalur, Tamil Nadu, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தான தானன தத்தன தந்தன
     தான தானன தத்தன தந்தன
          தான தானன தத்தன தந்தன ...... தனதான

மானை நேர்விழி ஒத்த மடந்தையர்
     பாலை நேர்மொழி ஒத்து விளம்பியர்
          வாச மாமலர் கட்டும் அரம்பையர்  ...... இருதோளும்

மார்பு மீதினும்  முத்து வடம்புரள்
     காம பூரண பொற்கடகம் பொர
          வாரி நீல வளைக்கை புலம்பிட ...... அநுராகம்

ஆன நேரில்விதத் திரயங்களும்
     நாண மாற மயக்கி இயம்பவும்
          ஆடை சோர நெகிழ்த்தி இரங்கவும் ...... உறவாடி

ஆரவார நயத்த குணங்களில்
     வேளின் நூல்களை கற்ற விளம்பவும்
          ஆகு மோக விபத்தும் ஒழிந்துனை ...... அடைவேனோ

சானகீ துயரத்தில் அருஞ்சிறை
     போன போதுதொகுத்த சினங்களில்
          தாப சோபம் ஒழிப்ப இலங்கையும்  ...... அழிவாகத்

தாரை மானொரு சுக்கிரிபன் பெற
     வாலி வாகு தலத்தில் விழுந்திட
          சாத வாளி தொடுத்த முகுந்தனன் ...... மருகோனே

கான வேடர் சிறுக்குடில் அம்புனம்
     மீதில் வாழ்இதணத்தில் உறைந்திடு
          காவல் கூரும் குறத்தி புணர்ந்திடும் ...... மணிமார்பா

காஉலாவிய பொற்கமுகின் திரள்
     பாளை வீச மலர்த்தடமும் செறி
          காவளூர் தனில் முத்தமிழும் தெரி ...... பெருமாளே.

No comments:

Post a Comment