(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு சோமேஸ்வர சுவாமி திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கும்பகோணத்திற்கென அருணகிரிப் பெருமான் 7 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், மூன்று சிவத்தலங்களை உள்ளடக்கிய ஒரு திருப்புகழ் தலம் கும்பகோணம், அவை முறையே திருக்குடமூக்கு (ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்), குடந்தைக் காரோணம் (சோமேஸ்வர சுவாமி ஆலயம்) மற்றும் குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்). அவற்றுள் இப்பதிவில் நாம் தரிசிக்க இருப்பது குடந்தைக் காரோணம்.
சிறிது விசாலமான திருக்கோயில், சிவபரம்பொருள் சோமேஸ்வரர் எனும் திருநாமத்திலும் அம்பிகை தேனார் மொழியம்மை எனும் திருநாமத்திலும் எழுந்தருளி இருக்கின்றனர். ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, இவ்வாலயத்தில் தனிச்சன்னிதியிலும் சம்பந்த மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார்.
சிவசன்னிதியின் பின்புறம் வெளிப்பிரகாரத்தில் நமது திருப்புகழ் தெய்வம் 'முன்புறம் ஐந்து திருமுகங்கள் பின்புறம் ஒரு திருமுகத்துடனும், பன்னிரு திருக்கரங்களுடன், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியருடன், திருப்பாதங்களில் காலணிகள் விளங்க' எழுந்தருளி இருக்கின்றான், ஆச்சரியத் திருக்கோலம்.
(Google Maps: SCN028-Someswar Temple, Big Bazaar St, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001)

திருப்புகழ் பாடல்கள்:
கும்பகோணத்திற்கான ஏழு திருப்பாடல்களும் கீழ்க்குறித்துள்ள 'திருக்குடமூக்கு' வலைத்தள தலத்தின் பக்கத்தில் தொகுக்கப் பெற்றுள்ளது.
(2019 டிசம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:
Post a Comment