Wednesday, November 28, 2018

திலதைப்பதி

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து 23 கி.மீ தூரத்திலும், நன்னிலத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும், பூந்தோட்டம் எனும் சிற்றூரிலிருந்து 3 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது (தற்கால வழக்கில் செதிலைப்பதி என்று வழங்கப்பட்டு வருகின்றது).

(Google Maps: SCN058- Sethalapathi Shiva Temple, Ayyampettai, Tamil Nadu 609503, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனனத் தனனா ...... தனதான

இறை அத்தனையோ ...... அதுதானும்
இலையிட்டுணல் ஏய் ...... தருகாலம்
அறையிற் பெரிதா ...... மலமாயை
அலையப் படுமாறினி யாமோ
மறைஅத்தனை மா ...... சிறைசாலை
வழிஉய்த்துயர் வானுறு தேவர்
சிறையைத் தவிரா ...... விடும்வேலா
திலதைப் பதிவாழ் ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதான

பனகப் படமிசைந்த முழையில் தரள நின்று
     படர்பொன் பணிபுனைந்த ...... முலைமீதில்

பரிவற்றெரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை
     படுபுள் பவன முன்றில் இயலாரும்

அனமொத்திடு சிறந்த நடையில் கிளியின்இன்சொல்
     அழகில்தனி தளர்ந்தும் ...... அதிமோகம் 

அளவிப் புளக கொங்கை குழையத் தழுவியின்ப
     அலையில் திரிவனென்றும் ...... அறிவேனோ

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா

தகிடத் தகிட தந்த திமிதத் திமிதவென்று
     தனிமத்தள முழங்க ...... வருவோனே

செநெனற் கழனி பொங்கி திமிலக் கமலம்அண்டி
     செறிநல் கழை திரண்டு ...... வளமேவித்

திருநல் சிகரி துங்க வரையைப் பெருவுகின்ற
     திலதைப்பதி அமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த
     தனனத் தனத்த தந்த ...... தனதான

மகரக் குழைக்குள்உந்து நயனக் கடைக்கிலங்கு
     வசியச் சரத்தியைந்த ...... குறியாலே

வடவெற்பதைத் துரந்து களபக் குடத்தை வென்று
     மதர்வில் பணைத்தெழுந்த ...... முலைமீதே

உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொதிந்த
     உலை பட்டலர்ச் சரங்கள் ...... நலியாமல்

உலகப் புகழ்ப் புலம்பு கலியற்றுணர்ச்சி கொண்டுன் 
     உரிமைப் புகழ்ப் பகர்ந்து ...... திரிவேனோ

புகர்கைக் கரிப் பொதிந்த முளரிக் குளத்திழிந்த
     பொழுதில் கரத்தொடர்ந்து ...... பிடிநாளில் 

பொருமித் திகைத்து நின்று வரதற்கடைக்கலங்கள்
     புகுதக் கணத்து வந்து ...... கையிலாரும் 

திகிரிப் படைத்துரந்த வரதற்குடன் பிறந்த
     சிவை தற்பரைக்கிசைந்த ...... புதல்வோனே

சிவபத்தர் முத்தர் உம்பர் தவசித்தர் சித்தமொன்றும் 
     திலதைப் பதிக்குகந்த ...... பெருமாளே

No comments:

Post a Comment