(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு சக்திவனேசுவரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில், பட்டீஸ்வரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
(Google Maps: SCN022-Thirusakthimuttam Temple,Padal Petra Temple, Patteeswaram, Tamil Nadu 612703, India)
(Google Maps: SCN022-Thirusakthimuttam Temple,Padal Petra Temple, Patteeswaram, Tamil Nadu 612703, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான
கடகரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்கமிக
உரமிடநெருக்கிப் பிடித்துப் புடைத்துவளர்
கனககுடம் ஒத்துக் கனத்துப் பெருத்தமணி ...... அணியாலே
கதிர்திகழு செப்பைக் கதிக்கப் பதித்துமகிழ்
கமலமுகை பட்சத்திருத்திப் பொருத்துமுலை
கமழ்விரைகொள் செச்சைக் கலப்பைப் பொதித்ததனை ...... விலகாது
கடுவை அடுவைப்பற்றி விற்சிக்க வைத்தசெயல்
எனநிறம்இயற்றிக் குயிற்றிப் புரட்டிவரு
கயல்விழி வெருட்டித் துரத்திச் செவிக்குழையின் ...... மிசைதாவும்
கள மதனுக்குச் சயத்தைப் படைத்துலவு
கடுமொழி பயிற்றக்களைத்துக் கொடிச்சியர்கள்
கணியினில் அகப்பட்டழுத்தத் துயர்ப் படுவதொழியேனோ
அடலைபுனை முக்கண்பரற்குப் பொருள்சொல்!அரு
மறைதனை உணர்த்திச் செகத்தைப் பெருத்தமயில்
அதனை முனடத்திக் கணத்தில் திரித்துவரும் அழகோனே
அபகடம் உரைத்தத்த மெத்தப் படைத்துலகில்
எளியரை மருட்டிச் செகத்தில் பிழைக்கஎணும்
அசடர்த மனத்தைக் கலக்கித் துணித்தடரும் அதிசூரா
விடஅரவணைக்குள் துயிற்கொள் க்ருபைக் கடவுள்
உலவுமலை செப்பைச் செவிக்கண் செறித்துமிக
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில்வரும் ஒருமாயோன்
விழைமருக கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை
நெறுநெறென வெட்டுக்ர சத்தித் தனிப்படைய
விடையவர் திருச்சத்திமுத்தத்தினில் குலவு ...... பெருமாளே.
No comments:
Post a Comment