(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: இரு ஆலயங்கள், அருள்மிகு வடதளிநாதர் மற்றும் சோமேஸ்வரர் திருக்கோயில்கள்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
பட்டீஸ்வரத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 7.0 கி.மீ தூரத்திலும் இத்தலம் 'பழையாறை வடதளி' அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் பழையாறை கீழ்த்தளி 'சோமேஸ்வரர் திருக்கோயில்' அமைந்துள்ளது. இவ்விரு ஆலயங்களையுமே ஒரு திருப்புகழ் தலமெனக் கொண்டு தரிசித்தல் வேண்டும்.
Google Maps:
SCN024 - Pazhayarai Vadathali Temple,Padal Petra Temple, Muzhaiyur, Tamil Nadu 612703, India
Someswarar Temple, Pazhaiyarai (Ancient Chola Temple), Pazhayarai, Tamil Nadu 612703, India
Google Maps:
SCN024 - Pazhayarai Vadathali Temple,Padal Petra Temple, Muzhaiyur, Tamil Nadu 612703, India
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன ...... தனதான
தோடுற்றுக் காதளவோடிய
வேலுக்குத் தானிகரா எழு
சூதத்தில் காமனி(ன்) ராசத ...... விழியாலே
சோடுற்றத் தாமரை மாமுகை
போலக் கற்பூரம் அளாவிய
தோல்முத்துக் கோடென வீறிய ...... முலை மானார்
கூடச்சிக் காயவர்!ஊழிய
மேபற்றிக் காதலினோடிய
கூளச் சித்தாளனை மூளனை ...... வினையேனைக்
கோபித்துத் தாயென நீயொரு
போதத்தைப் பேசஅதாலருள்
கோடித்துத் தானடியேன் அடி ...... பெறவேணும்
வேடிக்கைக்கார !உதாரகு
ணா பத்மத் தாரணி காரண
வீரச் சுத்தா மகுடாசமர் ...... அடுதீரா
வேலைக் கட்டாணி மகாரத
சூரர்க்குச் சூரனை வேல்விடு
வேழத்தில் சீர்அருளூறிய ...... இளையோனே
ஆடத்தக்கார் உமை பாதியர்
வேதப்பொற் கோவண ஆடையர்
ஆலித்துத் தான்அருளூறிய ...... முருகோனே
ஆடப்பொற் கோபுர மேவிய
ஆடிக்கொப்பா மதிள் சூழ்!பழை
யாறைப் பொற்கோயிலின் மேவிய ...... பெருமாளே.
No comments:
Post a Comment