Sunday, November 25, 2018

நல்லூர்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர்

திருக்கோயில்: அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்ச வர்ணேஸ்வரர்) திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

தஞ்சாவூர் - கும்பகோணம் பயண மார்க்கத்தில் கும்பகோணத்திற்கு 13 கி.மீ முன்னர், சுந்தரபெருமாள்கோயில் எனும் இடத்திலிருந்து 3 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: SCN020 - Thiru Nallur Shiva Temple(Sri KalyanaSundareswarar temple), Nallur Agraharam, Tamil Nadu 614207, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

மூல முண்டகனுபூதி மந்திர!ப
     ராபரம் சுடர்கள் மூணுமண்டல!அ
          தார சந்திமுகம் ஆறும் இந்த்ர தருவும் தளாமேல்

மூதுர்அம்பலவர் பீடம் !அந்தமுமி
     லாத பந்தஒளி ஆயிரம்கிரண
          மூணும் இந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்து நாதம்

ஓலமென்றுபல தாள சந்தமிடு
     சேவை கண்டமுதை !வாரியுண்டுலகி
          ரேழு கண்டு விளையாடி இந்துகதிர் அங்கிசூலம்

ஓடும்அந்த கலிகால் ஒடுங்கநடு
     தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
          மீதணைந்து சத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ

சூலி அந்தரி கபாலி சங்கரி!பு
     ராரி அம்பரி குமாரி எண்குண!சு
          வாமி பங்கி சிவகாம சுந்தரி உகந்த சேயே

சூர சங்கர குமார இந்திர!ச
     காய அன்பர் உபகார சுந்தர!கு
          கா எனும் சுருதி ஓலமொன்ற நடனம்கொள் வேலா

சீல வெண்பொடி இடாத வெஞ்சமணர்
     மாள வெங்கழுவிலேறும் என்றுபொடி
          நீறிடும்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே

தேவ ரம்பை அமுதீண மங்கைதரு
     மானணைந்த புய தீர சங்கர!தி
          யாகர் வந்துறை நலூர் அமர்ந்துவளர் ...... தம்பிரானே

No comments:

Post a Comment