Monday, November 26, 2018

நாகப்பட்டினம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு காயாரோகண சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

காரைக்காலிலிருந்து 21 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Kayarohana Swami Temple, Neela Sannathi, ASN Colony, Melakottaivasal, Nagapattinam, Tamil Nadu 611003, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

ஓலமிட்டிரைத்தெழுந்த வேலை வட்டமிட்டஇந்த
     ஊர்முகில் தருக்களொன்றும் அவர்!ஆரென்

றூமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்தரென்றும்
     ஊனரை ப்ரபுக்களென்றும் அறியாமல் 

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்குரைத்தநந்த
     கோடியிச்சை செப்பி வம்பில் உழல்நாயேன்

கோபமற்று மற்றுமந்த மோகமற்றுனைப் பணிந்து
     கூடுதற்கு முத்தியென்று ...... தருவாயே

வாலை துர்க்கை சக்திஅம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெடுத்துகந்த ...... சிறியோனே

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ நெட்டயில் துரந்த
     வாகை மற்புய ப்ரசண்ட ...... மயில்வீரா

ஞால வட்ட முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற
     நாரணற்கருள் சுரந்த ...... மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனைக் களைந்த
     நாகபட்டினத்தமர்ந்த ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தான தந்ததன தந்ததன தந்ததன
     தான தந்ததன தந்ததன தந்ததன
          தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான

மார்புரம்பின் நளினம் கிரியெனும் !தனமொ
     டாரமும் படி தரம்பொறியுடன் பணிகள்
          மாலையொண் பவளமும் பரிமளம் கலவை ...... தொங்கலாட

வாள்சரம்கண் இயலும் குழை தளம்பளக
     பார தொங்கலணி பெண்கள் வதனங்கள்மதி
          வாகையென்ப இதழும் சலசம்என்பகள ...... சங்குமோக

சாரமஞ்சள் புயமும் கிளி முகங்கள்உகிர்
     பாளிதம் புனை துவண்டிடையொடின்பரச
          தாழியென்ப அல்குலும்துளிர் அரம்பைதொடை ...... ரம்பைமாதர்

தாள்சதங்கை கொலுசும் குலசிலம்பும்!அணி
     யாடல் கொண்டமட மங்கையருடன் கலவி
          தாகமுண்டுழல்கினும் கழலுறும் கழல் மறந்திடேனே

வீர வெண்டையம் முழங்கவரி சங்கு!முர
     சோடு பொன்பறை ததும்ப விதியும் சுரரும்
          வேத விஞ்சையருடன் குமுற வெந்துக அடர்ந்தசூரன்

வீறடங்க முகிலும்கமற நஞ்சுடைய
     ஆயிரம்பகடு கொண்ட உரகன்!குவடு
          மே கொளுந்தபல் சிரந்தனை எறிந்து நடனம்கொள்வேலா

நாரசிங்க வடிவம்கொடு !ப்ரசண்டிரணி
     யோன் நடுங்க நடனம்செய்து இலங்கைவலி
          ராவணன்குலம் அடங்கசிலை கொண்ட கரர் ...... தந்தமூல

ஞானமங்கை அமுதம்சொருபி என்றனொரு
     தாய்அணங்கு குறமங்கையை மணந்தபுய
          நாகையம்பதி அமர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.

திருப்பாடல் 3:
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

விழுதாதெனவே கருதாதுடலை
     வினை சேர்வதுவே ...... புரிதாக

விருதா வினிலே உலகாயத!மே
     லிடவே மடவார் ...... மயலாலே

அழுதா கெடவே அவமா !கிடநா
     ளடைவே கழியாதுனை ஓதி

அலர் தாளடியேன் உறவாய் மருவோர் 
     அழியா வரமே ...... தருவாயே

தொழுதார் வினைவேர் அடியோடறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா

சுரர்பூபதியே கருணாலயனே
     சுகிர்தா அடியார் ...... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவேல் 
     இறைவா எனை ஆளுடையோனே

இறைவா எதுதா அதுதா தனையே
     இணை நாகையில்வாழ் ...... பெருமாளே


No comments:

Post a Comment