Sunday, November 25, 2018

சக்கிரப்பள்ளி:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர்

திருக்கோயில்: அருள்மிகு சக்கரவாகீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணம் - தஞ்சாவூர் பயண மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து 23 கி.மீ தொலைவில், ஐயம்பேட்டை எனும் ஊரிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Chakrapalli Chakra Vaagheeswara Temple,Padal Petra Temple, Ayyampet,, Chakkarappalli, Ayyampet, Tamil Nadu 614211, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தத்த தத்தன தத்தன தத்தன
     தத்த தத்தன தத்தன தத்தன
          தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான

திட்டெனப்பல செப்பை அடிப்பன
     பொற்குடத்தை உடைப்பன உத்தர
          திக்கினில்பெரு வெற்பை விடுப்பன ...... அதின்மேலே

செப்ப அத்திமருப்பை ஒடிப்பன
     புற்புதத்தை இமைப்பில் அழிப்பன
          செய்த்தலைக் கமலத்தை அலைப்பன ...... திறமேய

புள்தனைக் ககனத்தில் விடுப்பன
     சித்தமுற் பொரவிட்டு முறிப்பன
          புட்பஇக்கன் முடிக்குறி உய்ப்பன ...... இளநீரைப்

புக்குடைப்பன முத்திரை இட்ட!த
     னத்தை விற்பவர் பொய்க் கலவிக்குழல்
          புத்தியுற்றமை அற்றிட எப்பொழுதருள்வாயே

துட்ட நிக்ரக சத்திதர !ப்ரப
     ல ப்ரசித்த சமர்த்த தமிழ்த்ரய
          துட்கரக் கவிதைப் புகலிக்கரசெனு நாமச்

சொற்க நிற்க சொலட்சண தட்சண
     குத்தரத்தில் அகத்தியனுக்கருள்
          சொற் குருத்வ மகத்துவ சத்வ ஷண்முக நாத

தட்டறச் சமையத்தை வளர்ப்பவள் 
     அத்தன்முன் புகழ் செப்ப அநுக்ரக
          சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி

சட் பதத்திரள் மொய்த்த மணப்பொழில்
     மிக்க ரத்ந மதிற்புடை சுற்றிய
          சக்கிரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே

No comments:

Post a Comment