(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கும்பகோணத்திலிருந்து 6.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
(Google Maps: Thirunageshwaram naganathan Swamy Temple, Thirunageswaram, Thanjavur, Tamil Nadu 612204, India)
(Google Maps: Thirunageshwaram naganathan Swamy Temple, Thirunageswaram, Thanjavur, Tamil Nadu 612204, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன ...... தனதான
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம்
ஆகாதெனாமல் பொசித்த துட்டர்கள்
நானாஉபாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொம்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்வில் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை
கூடாத பாவத்தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப் பிறப்பினில் உழல்வாரே
வீசாவிசாலப் பொருப்பெடுத்தெறி
பேர்ஆரவாரச் சமுத்திரத்தினில்
மீளாமல்ஓடித் துரத்தி உட்குறும் ஒருமாவை
வேரோடு வீழத் தறித்தடுக்கிய
போராடு சாமர்த்தியத் திருக்கையில்
வேலாயுதா மெய்த் திருப்புகழ்ப்பெறு ...... வயலூரா
நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர்
மாயா விகாரத்தியக்கறுத்தருள்
ஞானோபதேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான
நாதாஎனாமுன் துதித்திடப் புவி
ஆதார மாய்கைக்கு முட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.
No comments:
Post a Comment