Sunday, November 25, 2018

திருப்பூந்துருத்தி

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர்

திருக்கோயில்: அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

தஞ்சாவூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

Google Maps: 
SCN011 - Sri Pushpavana Nathar Temple, Big Temple Street, Thiruppoonthuruthi, Tamil Nadu 613103, India

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தாந்த தத்தன தானா தானன
     தாந்த தத்தன தானா தானன
          தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
     சேர்ந்தணைத்தெதிர் மார்பூடே பொர
          வேண்டு சர்க்கரை பால் தேனேரிதழ் ...... உண்டு தோயா

வேண்டுரைத்துகில் வேறாய் மோகன
     வாஞ்சையில் களிகூரா வாள்விழி
          மேம்படக் குழை மீதே மோதிட ...... வண்டிராசி

ஓங்கு மைக்குழல் சாதா வீறென
     வீந்து புட்குரல் கூவா வேள்கலை
          ஓர்ந்திடப்பல க்ரீடா பேத முயங்கும்ஆகா

ஊண்புணர்ச்சியும் மாயா வாதனை
     தீர்ந்துனக்கெளிதாயே மாதவம் 
          ஊன்றுதற்கு மெய்ஞ்ஞானா சாரம் வழங்குவாயே

தாங்கு நிற்சரர் சேனா நீதர்!உ
     னாங்கு ருத்ர குமாரா கோஷண
          தாண்டவற்கருள் கேகீ வாகன ...... துங்க வீரா

சாங்கிபற் சுகர் !சீநாதீசுர 
     ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
          சாந்த வித்தக ஸ்வாமீ நீபஅலங்கன் மார்பா

பூங்குளத்திடை தாராவோடனம் 
     மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
          போன்ற விக்ரக சூராரீ பகிரண்ட ரூபா

போந்த பத்தர் பொலாநோய் போயிட
     வேண்டநுக்ரக போதா மேவிய
          பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.


No comments:

Post a Comment