Monday, November 26, 2018

கீரனூர்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம் 

திருக்கோயில்: அருள்மிகு அன்னை ஷீராம்பிகை சமேத ஸ்ரீசிவலோகநாதர் திருக்கோயில் (இங்கு 'முத்துக்குமார சுவாமி' எனும் திருநாமத்தில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுள் மிகவும் பிரசித்தம்)

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், திருமணஞ்சேரியிலிருந்து 23 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது (குறிப்பு: புதுக்கோட்டையிலும் கீரனூர் எனும் ஊர் உள்ளது, எனினும் வலையப்பேட்டை திரு. கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய இறுதி ஆய்வுக் கட்டுரையில் 'இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீசிவலோகநாதர் திருக்கோயிலே' என்று உறுதிப்படுத்தியுள்ளார்). 


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
          தான தானன தத்தன தத்தன ...... தனதான

ஈரமோடு சிரித்து வருத்தவும்
     நாதகீத நடிப்பில் உருக்கவும்
          ஏவராயினும் எத்திஅழைக்கவும் ..... மதராஜன்

ஏவின் மோது கணிட்டு மருட்டவும்
     வீதிமீது தலைக்கடை நிற்கவும்
          ஏறுமாறு மனத்தி நினைக்கவும் ...... விலைகூறி

ஆர பார தனத்தை அசைக்கவும் 
     மாலைஓதி குலைத்து முடிக்கவும்
          ஆடை சோர அவிழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக

ஆசை போல்மன இஷ்டம் உரைக்கவும் 
     மேல்விழா வெகு துக்கம் விளைக்கவும்
          ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ

பாரமேரு பருப்பத மத்தென
     நேரிதாக எடுத்துடன் நட்டுமை
          பாகர்ஆரப் படப்பணி சுற்றிடு ...... கயிறாகப்

பாதி வாலி பிடித்திட மற்றொரு
     பாதி தேவர் பிடித்திட லக்ஷுமி
          பாரிசாத முதற்பல சித்திகள் ...... வருமாறு

கீர வாரிதியைக் !கடைவித்ததி
     காரியாய் அமுதத்தை அளித்த!க்ரு
          பாளுவாகிய பச்சுரு அச்சுதன் ...... மருகோனே

கேடிலா அளகைப் பதியில் பல
     மாட கூட மலர்ப் பொழில் சுற்றிய
          கீரனூர்உறை சத்தி தரித்தருள் ...... பெருமாளே.

No comments:

Post a Comment