Saturday, November 24, 2018

வயலூர்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி 

திருக்கோயில்: அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் 

தல வகை: முருகன் திருக்கோயில் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் பிரசித்தமான இத்தலம் அமைந்துள்ளது.

(Google Maps: Shri Vayalur Murugan Temple, Sundar Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620021, India)

திருப்புகழ் பாடல்கள்:

அருணகிரிநாதர் இங்கு எழுந்தருளியுள்ள பொய்யா கணபதிக்கு 3 திருப்பாடல்களையும், முருகப் பெருமானுக்கு 19 திருப்பாடல்களையும் அருளிச் செய்துள்ளார். 

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


விநாயகர் திருப்புகழ்:


திருப்பாடல் 1:
தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான

கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி
     கப்பிய கரிமுகம் ....அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ(ர்)
     கற்பகம் எனவினை ....கடிதேகும்

மத்தமு(ம்) மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொரு திரள்புய ....மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ....பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ....முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
     அச்சது பொடிசெய்த ....அதிதீரா

அத்துயரது கொடு சுப்பிரமணி படும்
     அப்புனம் அதனிடை ....இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ....பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

பக்கரை விசித்ரமணி பொற்கலணை இட்டநடை
     பட்சியெனும் உக்ர துரகமு(ம்) நீபப்

பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ....வடிவேலும்

திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு(ம்) முற்றிய பனிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
     செப்பென எனக்கருள்கை ....மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடநெய்
     எள்பொரி அவல்துவரை ....இளநீர்!வண்

டெச்சில் பயறப்ப வகை பச்சரிசி பிட்டு!வெள
     ரிப்பழம் இடிப்பல்வகை ....தனிமூலம்

மிக்கஅடிசில் கடலை பட்சணம் எனக்கொள்ஒரு
     விக்கிந சமர்த்தன்எனும் ....அருளாழி

வெற்ப குடிலச்சடில விற்பரமர் அப்பரருள்
     வித்தக மருப்புடைய ....பெருமாளே.

திருப்பாடல் 3:
தந்ததனத் தானதனத் ....தனதான
     தந்ததனத் தானதனத் ....தனதான

உம்பர்தருத் தேநுமணிக் ....கசிவாகி
     ஒண்கடலில் தேனமுதத்துணர்வூறி

இன்பரசத்தே பருகிப் ....பலகாலும்
     எந்தன் உயிர்க்காதரவுற்றருள்வாயே

தம்பி தனக்காக வனத்தணைவோனே
     தந்தை வலத்தால் அருள்கைக் ....கனியோனே

அன்பர் தமக்கான நிலைப் ....பொருளோனே
     ஐந்துகரத்தானை முகப் ....பெருமாளே

முருகன் திருப்புகழ்


திருப்பாடல் 1:
தனதன தானான தானந் தனதன தானான தானந்
     தனதன தானான தானந் ...... தனதான

அரிமருகோனே நமோ என்றறுதியிலானே நமோ!என்
     றறுமுக வேளே நமோ என்றுன பாதம்

அரகர சேயே நமோ என்றிமையவர் வாழ்வே !நமோஎன்
     றருண சொரூபா நமோ என்றுளதாசை

பரிபுர பாதா சுரேசன் தருமகள் நாதா அராவின்
     பகைமயில் வேலாயுதாடம்பர நாளும்

பகர்தலிலா தாளைஏதும் சிலதறியா ஏழை நானுன்
     பதிபசு பாசோபதேசம் ...... பெறவேணும்

கரதல சூலாயுதா முன் சலபதி போல்ஆரவாரம் 
     கடின சுராபான சாமுண்டியும்ஆடக்

கரிபரி மேலேறுவானும் செயசெய சேனாபதீயென்
     களமிசை தானேறியே அஞ்சியசூரன்

குரல்விட நாய்பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் 
     குடல் கொளவே பூசலாடும் ...... பலதோளா

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழும் 
     குளிர்வயலூர் ஆரமேவும் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானதன தாத்த தானதன தாத்த
     தானதன தாத்த ...... தனதான

ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
     ஆடையணி காட்டி ...... அநுராக

ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
     ஆதரவு காட்டி ...... எவரோடும்

ஈரநகை காட்டி நேர மிகை !காட்டி
     யேவினைகள் காட்டி ...... உறவாடி

ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி
     ஈடழிதல் காட்டல் அமையாதோ

வீரஅபராட்டு சூரர் படை காட்டில்
     வீழ்அனலை ஊட்டி ...... மயிலூர்தி

வேலையுறை நீட்டி வேலை தனிலோட்டு
     வேலை விளையாட்டு ...... வயலூரா

சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
     சீலி குறவாட்டி ...... மணவாளா

தேசுபுகழ் தீட்டி ஆசைவரு கோட்டி
     தேவர் சிறை மீட்ட ...... பெருமாளே

திருப்பாடல் 3:
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தத்தத்த தத்ததன ...... தந்ததான

இகல்கடின முகபட விசித்ரத் துதிக்கைமத
     மத்தக் களிற்றைஎதிர்
புளகதனம் இளகஇனி தெட்டிக் கழுத்தொடுகை
     கட்டிப் பிணித்திறுகி
இதழ்பொதியின் அமுதுமுறை மெத்தப் புசித்துருகி
     முத்தத்தை இட்டுநக ...... தந்தமான

இடுகுறியும் வரையைஉற நெற்றித் தலத்திடையில்
     எற்றிக் கலக்கமுற
இடைதுவள உடைகழல இட்டத்தரைப் பைஅது
     தொட்டுத் திரித்துமிக
இரணமிடு முரணர்விழி ஒக்கக் கறுத்தவிழி
     செக்கச் சிவக்க வளை ...... செங்கை சோர

அகருவிடு ம்ருகமத மணத்துக் கனத்தபல
     கொத்துக் குழல் குலைய
மயில்புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல்பகர
     நெக்குக் கருத்தழிய
அமளி பெரிதமளிபட வக்கிட்டு மெய்க்கரண
     வர்க்கத்தினில் புணரும் இன்பவேலை

அலையின்விழி மணியின் வலையிட்டுப் பொருள்கவர
     கட்டுப்பொறிச்சியர்கள்
மதனகலை விதனம் அறுவித்துத் திருப்புகழை
     உற்றுத் துதிக்கும்வகை
அபரிமித சிவஅறிவு சிக்குற்றுணர்ச்சியினில்
     ரக்ஷித்தளித்தருள்வதெந்த நாளோ

திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட
     தத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்கச் செகச்செகண
     சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி
     தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ

திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி
     தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி
     டட்டட்ட குட்டகுட
கெனதிமிர்த தவில்மிருகடக்கைத் திரள்சலிகை
     பக்கக் கணப்பறை தவண்டைபேரி

வகைவகையின் மிகஅதிர உக்ரத்தரக்கர் படை
     பக்கத்தினில் சரிய
எழுது துகில் முழுதுலவி பட்டப்பகல் பருதி
     விட்டத்தமித்ததென
வருகுறளி பெருகு குருதிக்குள் குளித்துழுது
     தொக்குக் குனிப்புவிட ...... வென்ற வேலா

வயலிநகர் பயில்குமர பத்தர்க்கநுக்ரக!வி
     சித்ர ப்ரசித்தமுறு
அரிமருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி
     தத்வத் திறச்சிகர
வடகுவடில் நடனமிடும் அப்பர்க்கு முத்திநெறி
     தப்பற்றுரைக்கவல ...... தம்பிரானே.

திருப்பாடல் 4:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

இலகு முலைவிலை அசடிகள் கசடிகள்
     கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்
          எயிறு கடிபடும் உதடிகள் பதடிகள் ...... எவரோடும்

இனிய நயமொழி பழகிகள் அழகிகள்
     மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்
          யமனும் மிகையென வழிதரு முழிதரும் ...... விழிவாளால்

உலகம் இடர்செயும் நடலிகள் மடலிகள்
     சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்
          உறவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே

உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
     பகடியிடவல கபடிகள் முகடிகள்
          உணர்வு கெடும்வகை பருவிகள் உருவிகள் உறவாமோ

அலகை புடைபட வருவன பொருவன
     கலக கணநிரை நகுவன தகுவன
          அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி

அலரி குடதிசை அடைவன குடைவன
     தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன
          அகில புவனமும் அரகர கரஎன ...... அமர்வேள்வி

திலக நுதலுமை பணிவரு செயமகள்
     கலையின் நடமிட எரிவிரி முடியினர்
          திரள்பல் உயிருடல் குவடுகள் எனநட ...... மயிலேறிச்

சிறிது பொழுதினில் அயில்விடு குருபர
     அறிவு நெறியுள அறுமுக இறையவ
          த்ரிசிர கிரிஅயல் வயலியில் இனிதுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தன்னா தனத்தன தன்னா தனத்தன
     தன்னா தனத்தன ...... தந்ததான

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே

என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்
     என்னால் இருக்கவும் ...... பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை

என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்
     என்னால் தரிக்கவும் ...... இங்கு நானார்

கன்னார் உரித்தஎன் மன்னா எனக்குநல்
     கர்ணாமிர்தப் பதம் ...... தந்த கோவே

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
     கண்ணாடியில் தடம் ...... கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
     வன்வாளியில் கொளும் ...... தங்கரூபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

திருப்பாடல் 6:
தனனாத் தனதன தனனாத் தனதன
     தனனாத் தனதன ...... தனதான

கடல்போல் கணைவிழி சிலைபோல் பிறைநுதல்
     கனிபோல் துகிரிதழ் ...... எழிலாகும்

கரிபோல் கிரிமுலை கொடிபோல் துடியிடை
     கடிபோல் பணியரை ...... எனவாகும்

உடல் காட்டினிமையி ல் எழில் பாத்திரம்இவள் 
     உடையால் கெறுவித ...... நடையாலும்

ஒருநாள் பிரிவதும் அரிதாய்ச் சுழல்படும்
     ஒழியாத் துயரது ...... தவிரேனோ

குடல் ஈர்த்தசுரர்கள் உடல் காக்கைகள் நரி
     கொளிவாய்ப் பலஅலகைகள் பேய்கள்

கொலைபோர்க் களமிசை தினமேற்றமரர்கள்
     குடியேற்றிய குக ...... உயர்தாழை

மடல்கீற்றினில் எழு விரைபூப் பொழில்செறி
     வயலூர்ப் பதிதனில் உறைவோனே

மலைமேல் குடியுறை கொடு வேட்டுவருடை
     மகள்மேல் ப்ரியமுள ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனனத் தான தான தனதன
     தனனத் தான தான தனதன
          தனனத் தான தான தனதன ...... தனதான

கமலத்தே குலாவும் அரிவையை
     நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
          கலகக் காம நூலை முழுதுணர் இளைஞோர்கள்

கலவிக்காசை கூர வளர்!பரி
     மள கற்பூர தூமம் கனதன
          கலகத்தாலும் வானின் அசையுமின் இடையாலும்

விமலச் சோதி ரூப இமகர
     வதனத்தாலும் நாத முதலிய
          விரவுற்றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும்

வெயிலெப்போதும் வீசு மணிவளை
     அணிபொற் தோள்களாலும் வடுவகிர்
          விழியில் பார்வையாலும் இனியிடர் ...... படுவேனோ

சமரில் பூதம் யாளி பரிபிணி
     கனகத் தேர்கள் யானை அவுணர்கள்
          தகரக் கூர்கொள் வேலை விடுதிறல் உருவோனே

சமுகப் பேய்கள் வாழியென எதிர்
     புகழக் கானிலாடு பரிபுர
          சரணத்தேக வீர அமைமன ...... மகிழ்வீரா

அமரர்க்கீசனான சசிபதி
     மகள்மெய்த் தோயும் நாத குறமகள்
          அணையச் சூழ நீத கரமிசை ...... உறுவேலா

அருளில்சீர் பொயாத கணபதி
     திருஅக்கீசன் வாழும் வயலியின்
          அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தனதத்த தானான தனதத்த தானான
     தனதத்த தானான ...... தந்ததான

கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
     களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக்

கடைகெட்ட ஆபாதம் உறுசித்ர கோமாளர்
     கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணும் 

சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது
     சகளத்துளே நாளும் ...... நண்புளோர் செய்

சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது
     சலனப்படா ஞானம் ...... வந்து தாராய்

அமரில் சுராபான திதிபுத்ரர் ஆலோகம் 
     அது துக்கமேயாக ...... மிஞ்சிடாமல்

அடமிட்ட வேல்வீர திருவொற்றியூர் நாதர்
     அருணச்சிகா நீலகண்ட பாரம் 

மமபட்ச மாதேவர் அருமைச் சுவாமீ!நி
     மலநிட்களா மாயை ...... விந்துநாதம்

வரசத்தி மேலான பரவத்துவே மேலை
     வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 9:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
     மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு
          குலவு பலபணி பரிமளம் அறுசுவை ...... மடைபாயல்

குளிரில் அறையகம் இவைகளும்  அலம்அலம்
     மனைவி மகவனை அநுசர்கள் முறைமுறை
          குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம்...... ஒருநாலு 

சுருதி வழிமொழி சிவகலை அலதினி
     உலக கலைகளும் அலம்அலம் இலகிய
          தொலைவில் உனை நினைபவர் உறவலதினி ...... அயலார்பால்

சுழல்வதினிதென வசமுடன் வழிபடும் 
     உறவு அலம்அலம் அருளலை கடல்கழி
          துறைசெல் அறிவினை எனதுள மகிழ்வுற ...... அருள்வாயே

விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
     முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
          விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட

விபுதர் அரகர சிவசிவ சரணென
     விரவு கதிர்முதிர் இமகரன் வலம்வர
          வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா

மருது நெறுநெறு நெறுவென முறிபட
     உருளும் உரலொடு தவழரி மருக!செ
          வனச மலர்சுனை புலிநுழை முழையுடைய விராலி

மலையில்உறைகிற அறுமுக குருபர
     கயலும் மயிலையும் மகரமும் உகள்செநெல்
          வயலி நகரியில் இறையவ அருள்தரு ...... பெருமாளே.

திருப்பாடல் 10:
தனதானன தனதானன தனதானன தனதானன
     தனதானன தனதானன ...... தந்ததான

குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
     குறியீர்தனி செறியீர்இனி ...... என்றுபாடிக்

குனகாஅடி பிடியாஇதழ் கடியாநகம் வகிராஉடை
     குலையாஅல்குல் அளையாஇரு ...... கொங்கைமீதில் 

பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
     பகையேயென நினையாதுற ...... நண்புகூரும்

பசுபாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர
     பதிநேரு நினருளால்மெய் உணர்ந்திடேனோ

வெயில்வீசிய கதிராயிர அருணோதய இருள்நாசன
     விசையேழ்பரி ரவி சேயெனும் அங்கராசன்

விசிகாகவம் அயல்பேடி கை படுபோது சன்னிதியானவன்
     விதிதேடிய திருவாளி அரன்குமாரா

அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
     அகிலாரமதெறி காவிரி ...... வண்டல்மேவும்

அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
     அமராபதி அதில் வாழ்பவர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 11:
தான தான தனத்தந் தான தான தனத்தந்
     தான தான தனத்தந் ...... தனதான

கோவை வாய்இதழுக்கும் தாக போகமளிக்கும் 
     கோதை மாதர் முலைக்கும் ...... குறியாலும்

கோல மாலை வளைக்கும் தோளினாலும் !மணத்தங்
     கோதி வாரி முடிக்கும் ...... குழலாலும்

ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் !மயக்குண்
     டாசையாய்இனும் நித்தம் ...... தளராதே

ஆசிலாத மறைக்கும் !தேடொணாதொருவர்க்கொன்
     றாடல் தாள்கள் எனக்கின்றருள்வாயே

சேவிலேறு நிருத்தன் தோகை பாகனளிக்கும் 
     த்யாக சீல குணத்தன் ...... திருமாலும்

தேடொணாத பதத்தன் தீதிலாத மனத்தன்
     தேயுவான நிறத்தன் ...... புதல்வோனே

காவிடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் 
     காவிசூழ் வயலிக்கும் ...... ப்ரியமானாய்

காதி மோதி எதிர்க்கும் சூரதீரர் ப்ரமிக்கும் 
     காலனாடல் தவிர்க்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 12:
தானன தனத்த தானன தனத்த
     தானன தனத்த ...... தனதான

தாமரையின் மட்டு வாச மலரொத்த
     தாளிணை நினைப்பில் அடியேனைத்

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
     தாருவென மெத்திய விராலி

மாமலையில் நிற்ப நீகருதியுற்று
     வாவென அழைத்தென் ...... மனதாசை

மாசினை அறுத்து ஞானமுதளித்த
     வாரமினி நித்தம் ...... மறவேனே

காமனையெரித்த தீநயன நெற்றி
     காதிய சுவர்க்க ...... நதிவேணி

கானிலுறை புற்றில் ஆடு பணியிட்ட
     காதுடைய அப்பர் ...... குருநாதா

சோமனொடருக்கன் மீனுலவு மிக்க
     சோலைபுடை சுற்று ...... வயலூரா

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
     சூர்தலை துணித்த ...... பெருமாளே.

திருப்பாடல் 13:
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

திருவுரூப நேராக அழகதான மாமாய
     திமிர மோக மானார்கள் ...... கலைமூடும் 

சிகரியூடு தேமாலை அடவியூடு போயாவி
     செருகு மால்அனாசார ...... வினையேனைக்

கருவிழாது சீரோதி அடிமை பூணலாமாறு
     கனவில்ஆள் சுவாமீநின் ...... மயில் வாழ்வும் 

கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
     கழலும் நீப வேல்வாகும் ...... மறவேனே

சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி
     சயில நாரி பாகாதி ...... புதல்வோனே

சத மகீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
     சகசமான சாரீ செய் இளையோனே

மருவு லோகம் ஈரேழும் அளவிடாவொணாவான
     வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே

மநுநியாய சோணாடு தலைமையாகவே மேலை
     வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 14:
தத்த தனதன தனனா தனனா
     தத்த தனதன தனனா தனனா
          தத்த தனதன தனனா தனனா ...... தனதான

நெய்த்த சுரிகுழல் அறலோ முகிலோ
     பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
          நெட்டை இணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும்

நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
     சுத்த மிடறது வளையோ கமுகோ
          நிற்கும் இளமுலை குடமோ மலையோ ...... அறவே !தேய்ந்

தெய்த்த இடையது கொடியோ துடியோ
     மிக்க திருவரை அரவோ ரதமோ
          இப்பொனடியிணை மலரோ தளிரோ ...... என மாலாய்

இச்சை விரகுடன் மடவாருடனே
     செப்ப மருளுடன் அவமே திரிவேன்
          ரத்ந பரிபுரம் இருகால் ஒருகால் ...... மறவேனே

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
     தெற்கு நரபதி திருநீறிடவே
          புக்க அனல்வயம் மிகஏடுயவே ...... உமையாள்தன்

புத்ரன் எனஇசை பகர்நூல் மறைநூல்
     கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
          பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் ...... வருவோனே

சத்தமுடைய ஷண்முகனே குகனே
     வெற்பிலெறி சுடர் அயிலா மயிலா
          சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளிகூரும் 

சக்ர தரஅரி மருகா முருகா
     உக்ர இறையவர் புதல்வா முதல்வா
          தட்பம் உளதட வயலூர் இயலூர் ...... பெருமாளே.

திருப்பாடல் 15:
தனன தத்தன தானன தானன
     தனன தத்தன தானன தானன
          தனன தத்தன தானன தானன ...... தனதான

முலை மறைக்கவும் வாசலிலே தலை
     மறைய நிற்கவும் ஆசையுளோரென
          முகிழ் நகைச்சிறு தூதினை ஏவவும் முகமோடே

முகமழுத்தவும் ஆசைகள் கூறவும் 
     நகமழுத்தவும் லீலையிலேயுற
          முறை மசக்கவும் வாசமுலா மலர் அணைமீதே

கலை நெகிழ்க்கவும் வாலிபர்ஆனவர்
     உடல் சளப்பட நாள்வழி நாள்வழி
          கறையழிக்கவும் நானெனவே அணி ...... விலையீதே

கடிய சத்தியமாம் எனவேசொலி
     அவர்கொடப் பணம் மாறிட வீறொடு
          கடுகடுத்திடுவாரொடு கூடியதமையாதோ

மலையை மத்தென வாசுகியே கடை
     கயிறெனத்திரு மாலொரு பாதியும் 
          மருவும் மற்றது வாலியு மேலிட ...... அலையாழி

வலய முட்டவொர் ஓசையதாய் ஒலி
     திமி திமித்திமெனா எழவே அலை
          மறுகிடக் கடையா எழ மேலெழும் அமுதோடே

துலைவருத் திரு மாமயில் வாழ்வுள
     வயலை அற்புதனே வினையானவை
          தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி ...... மணவாளா

துவள் கடிச்சிலை வேள் பகைவாதிரு
     மறுவொர் எட்டுடன் ஆயிரமேலொரு
          துகள்அறுத்தணியார் அழகா சுரர் ...... பெருமாளே.

திருப்பாடல் 16:
தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
     வேல்விழி புரட்டிக் காட்டி ...... அழகாக

மேனியை மினுக்கிக் காட்டி நாடகம் நடித்துக் காட்டி
     வீடுகளழைத்துக் காட்டி ...... மதராசன்

ஆகமம்உரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
     யாரொடும் நகைத்துக் காட்டி ...... விரகாலே

ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
     ஆசையை அவர்க்குக் காட்டி ...... அழிவேனோ

மோகன விருப்பைக் காட்டி ஞானமும் எடுத்துக் காட்டி
     மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா

மூவுலகளித்துக் காட்டி சேவலை உயர்த்திக் காட்டு
     மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா

வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
     வாழ்மயில் நடத்திக் காட்டும் இளையோனே

மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
     வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.

திருப்பாடல் 17:
தான தனதன தந்தன தந்தன
     தான தனதன தந்தன தந்தன
          தான தனதன தந்தன தந்தன ...... தனதான

வாளின் முனையினும் நஞ்சினும் வெஞ்சம
     ராஜ நடையினும் அம்பதினும்பெரு
          வாதை வகைசெய் கருங்கணும் எங்கணும் அரிதான

வாரியமுது பொசிந்து கசிந்த!செ
     வாயும் நகைமுக வெண்பலும் நண்புடன்
          வாரும் இருமெனும் இன்சொலு மிஞ்சிய ...... பனிநீரும் 

தூளி படுநவ குங்குமமும் குளிர் 
    ஆரமகில் புழுகும்புனை சம்ப்ரம
          சோதி வளர்வன கொங்கையும் மங்கையும் எவரேனும் 

தோயும் அளறெ நிதம்பமும் உ ந்தியும் 
     மாயை குடிகொள் குடம்பையுள் மன்பயில்
          சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ

காளி திரிபுரை அந்தரி சுந்தரி
     நீலி கவுரி பயங்கரி சங்கரி
          காருணிய சிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி

காதல் மனைவி பரம்பரை அம்பிகை
     ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
          கான நடனம் உகந்தவள் செந்திரு ...... அயன்மாது

வேளின் இரதி அருந்ததி இந்திர
     தேவி முதல்வர் வணங்கு த்ரியம்பகி
          மேக வடிவர்பின் வந்தவள் தந்தருள் இளையோனே

வேலும் மயிலும் நினைந்தவர் தம்துயர்
     தீரஅருள்தரு கந்த நிரந்தர
          மேலை வயலை உகந்துள நின்றருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 18:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான

விகட பரிமளம் ருகமத இமசல
     வகிர படிரமும் அளவிய களபமும் 
          மட்டித் திதழ்த் தொடை முடித்துத் தெருத்தலையில்
உலவி இளைஞர்கள் பொருளுடன் உயிர்கவர்
     கலவி விதவியன் அரிவையர் மருள்வலை
          இட்டுத் துவக்கிஇடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
     புரண புளகித இளமுலை உரமிசை
          தைக்கக் கழுத்தொடுகை ஒக்கப் பிணித்திறுகி ...... அன்புகூர

விபுதர் அமுதென மதுவென அறுசுவை
     அபரிமிதமென இலவிதழ் முறைமுறை
          துய்த்துக் களித்துநகம் வைத்துப் பலிற்குறியின்
வரையும் முறைசெய்து முனிவரு மனவலி
     கரையும் அரிசனம் பரிசனம் ப்ரியவுடை
          தொட்டுக் குலைத்து நுதல் பொட்டுப் படுத்தி மதர்
விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ
     மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி
          கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றிமடு ...... உந்திமூழ்கிப்

புகடு வெகுவித கரணமும் மருவிய
     வகையின் முகிலென இருளென வனமென
          ஒப்பித்த நெய்த்தபல புட்பக் குழல் சரிய
அமுத நிலைமலர் அடிமுதல் முடிகடை
     குமுத பதிகலை குறைகலை நிறைகலை
          சித்தத்தழுத்தி அநுவர்க்கத்துருக்கி ஒரு
பொழுதும் விடலரிதெனும் அநுபவம்அவை
     முழுது மொழிவற மருவிய கலவி!இ
          தத்து ப்ரியப்பட நடித்துத் துவட்சியினில் ...... நைந்துசோரப்

புணரும்இதுசிறு சுகமென இகபரம்
     உணரும் அறிவிலி ப்ரைமைதரு திரிமலம்
          அற்றுக் கருத்தொருமை உற்றுப்புலத் தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்
     உணர்வும் உணர்வுற வழுவற ஒருஜக
          வித்தைக் குணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலும் அநுபவ வடிவினை அளவறு
     அகில வெளியையும் ஒளியையும் அறிசிவ
          தத்வ ப்ரசித்தி தனை முத்திச் சிவக்கடலை ...... என்று சேர்வேன்

திகுட திகுகுட திகுகுட திகுகுட
     தகுட தகுகுட தகுகுட தகுகுட
          திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
     டமட டமமட டமமட டமமட
          டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
     தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
          திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி

திமிலை கரடிகை பதலை சலரிதவில்
     தமர முரசுகள் குடமுழவொடு துடி
          சத்தக் கணப்பறைகள் மெத்தத் தொனித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
     குசல பசுபதி குருவென விருதுகள்
          ஒத்தத் திரள்பலவும் உற்றிக் கலிக்கஎழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
     மகர சலநிதி மொகுமொகு மொகுவென
          எட்டுத் திசைக்களிறு மட்டற்றறப் பிளிற ...... நின்றசேடன்

மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
     அகில புவனமும் ஹரஹர ஹரவென
          நக்ஷத்ரம் உக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனும் மலைசொரி
     குருதி அருவியின் முழுகிய கழுகுகள்
          பக்கப் பழுத்தவுடல் செக்கச் சிவத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை
     எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
          பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலைப் பரவி ...... உம்பர்வாழ

மடிய அவுணர்கள் குரகத கஜரத
     கடகமுடைபட வெடிபட எழுகிரி
          அற்றுப் பறக்கவெகு திக்குப் படித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
     அமர் செய்தயில்கையில் வெயிலெழ மயில்மிசை
          அக் குக்குடக்கொடி செருக்கப் பெருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக
     இயலும் இசைகளும் நடனமும் வகைவகை
          சத்யப் படிக்கினிது அகஸ்த்யர்க்குணர்த்தியருள் ...... தம்பிரானே.

No comments:

Post a Comment