(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருநாவுக்கரசர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கும்பகோணத்திற்கென அருணகிரிப் பெருமான் 7 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், மூன்று சிவத்தலங்களை உள்ளடக்கிய ஒரு திருப்புகழ் தலம் கும்பகோணம், அவை முறையே திருக்குடமூக்கு (ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்), குடந்தைக் காரோணம் (சோமேஸ்வர சுவாமி ஆலயம்) மற்றும் குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்). அவற்றுள் இப்பதிவில் நாம் தரிசிக்க இருப்பது குடந்தைக் கீழ்க்கோட்டம்.
மிகவும் விசாலமான திருக்கோயில். சிவபரம்பொருள் நாகேஸ்வர சுவாமி எனும் திருநாமத்துடன் சிறிய திருமேனியராகவும், அம்பிகை பிரஹந்நாயகி எனும் திருநாமத்திலும் எழுந்தருளி இருக்கின்றனர். அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, சூர்ய தேவனும் நாகராஜனும் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். சிவசன்னிதியின் பின்புறம் வெளிப்பிரகாரத்தில் நமது திருப்புகழ் தெய்வம் நெடிதுயர்ந்த திருமேனியில் இரு தேவியரோடு சுப்பிரமணிய சுவாமி எனும் திருநாமத்துடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான்.
நவகிரகத் தலமாக (ராகு) அறியப்பட்டு வரும் திருநாகேஸ்வரம் நாகநாதர் திருக்கோயிலும், கும்பகோணத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலும் வெவ்வேறு தலங்கள் என்பது நினைவில் இருத்த வேண்டிய முக்கியக் குறிப்பு.
(Google Maps: kumbakonam nageswara swamy temple)

திருப்புகழ் பாடல்கள்:
கும்பகோணத்திற்கான ஏழு திருப்பாடல்களும் கீழ்க்குறித்துள்ள 'திருக்குடமூக்கு' வலைத்தள தலத்தின் பக்கத்தில் தொகுக்கப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment